163
இலங்கையில் அரசியல் ரீதியாக எம்மிடையே பிளவுகள் காணப்படுவதை அறிந்துகொண்டு, ஈஸ்டர் படுகொலை தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதா என்பது தொடர்பில் அரசாங்கம் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சபையில் கேள்வி எழுப்பினார்.
இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் சர்வதேச தொடர்பு உள்ளதா? இலங்கையை ஏன் தாக்க தீர்மானித்தார்கள் ? இன ரீதியில் நாம் அனைவரும் பிளவுபட்டுள்ள காரணத்தை பயன்படுத்தியும், அரசியல் ரீதியாக எம்மத்தியில் பிளவுகள் காணப்படுகின்றதை அறிந்துகொண்டும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளனவா?என்ற கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும் என்றும்அவர் வலியுறுத்தினார்.
அத்துடன் புதிய அரசியல் அமைப்பின் மூலமாக தேசியத்தை ஒன்றிணைத்தால் மட்டுமே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் இதன்போது இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
இப்போதும் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் இந்த சம்பவங்களை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற மட்டுமே நினைப்பதாகவும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் சரியாகும் என நினைப்பது தவறென்றும் கூறிய அவர் இவைகளை தடுக்கும் வகையில் புதிய அரசியல் அமைப்பினை கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Spread the love