திருப்பூர் மாவட்டம் புதிய புகளூரிலிருந்து கொண்டு செல்லப்படும் இரண்டு உயர்மின் கோபுரத் திட்டங்களைச் செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில இ புதிய புகளூரிலிருந்து திருவலம் வரை பவர்கிரீட் என்னும் நிறுவனத்தால் இரண்டு உயர்மின் கோபுர திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
இதனால் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படும் இடங்களுக்கு அருகில் வசிக்கும் உழவர்கள் மற்றும் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்காமல் திட்டங்களைச் செயல்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் இரண்டு திட்டங்களையும் 50 சதவிகித்துக்கு மேல் திட்டப்பணிகள் முடிந்திருந்தால் தொடரலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். எனினும் இரண்டு திட்டங்களிலும் 10 சதவிகித திட்டப்பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளமையினால் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி அத்திட்டத்தின் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது
அதேவேளை உயர்மின் கோபுரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்தியஇ மாநில அரசுகள் மற்றும் பவர்கிரீட் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.