ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினரின் குழந்தைகள் நல்வழியில் செயல்பட வேண்டி, ஆதரவற்றோர் இல்லம் அமைத்து தரப்படும் என நோர்வே நாட்டுப் பிரதமர் எர்னா சோல்பெர்க் அறிவித்துள்ளார். லண்டன், பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகளில் இருந்து ஐஎஸ் அமைப்பில் இணைய பலர் சிரியாவிற்கு சென்ற நிலையில் அவர்களில் சிலர் அமெரிக்கப்படையினரால் கைது செய்யப்பட்டு ள்ளனர்.
இந்தநிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் குழந்தைககளுக்காக ஆதரவற்றோர் இல்லம் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ள நோர்வே பிரதமத் தாங்கள் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்காக இல்லம் கொடுக்கவில்லை எனவும் அவர்களது மனைவிமார் மற்றும் அவர்களால் வழி தவறி நிற்கும், கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு தான் ஆதரவற்றோர் இல்லம் அமைக்க உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
#Norway #Prime Minister #Erna Solberg #ISIS