தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலும், குவாசூலூ-நட்டால் மாகாண பகுதிகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் பெய்த கனமழையால், தென்னாப்பிரிக்காவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடற்கரை பகுதிகளில் மேலதிக வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் எனவும், பலத்த காற்று வீசலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சில வீதிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் நிலச்சரிவுகளால் கட்டடங்கள் பாதிப்புள்ளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
#south africa #flood #landslide