கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் காரணமாக இதுவரை 48 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.பிரதான மூன்று நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 34 வெளிநாட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 14 பேர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, பங்களாதேஷ் நாட்டவர் ஒருவர், சீன நாட்டவர்கள் இருவர், இந்திய நாட்டவர்கள் 10 பேர், பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், டென்மார்க் நாட்டவர்கள் மூவர், ஜப்பான் நாட்டவர் ஒருவர், போர்த்துக்கல் நாட்டவர் ஒருவர், சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர், ஸ்பெயின் நாட்டவர் ஒருவர், துருக்கி நாட்டவர் ஒருவர், பிரித்தானிய நாட்டவர்கள் 6 பேர், அமெரிக்க மற்றும் பிரித்தானிய குடியுரிமை பெற்ற இருவர், அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக் குடியுரிமை பெற்ற இருவர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அடையாளம் காணப்படாத 14 வெளிநாடடவர்களின் சடலங்கள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்தின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, குண்டுத் தாக்குதலில் காயமடைந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 16 எனவும் அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது. #Srilanka #EasterSundayAttackLK https://globaltamilnews.net/2019/119324/