Home இலங்கை யாழில் நடைபாதை வியாபாரம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

யாழில் நடைபாதை வியாபாரம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழில் பழைய இரும்புகள் , பிளாஸ்ரிக் பொருட்களை சேகரித்து வந்தவர்களும் நடைபாதை வியாபாரங்களில் ஈடுபட்டவர்களும் தமது தொழில்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.

குடா நாட்டு வீதிகளில் காலை வேளைகளில் வாகனங்களில் ஒலிபெருக்கிகளை பொருத்தி ‘ பழைய இரும்புகள் , உடைந்த பிளாஸ்ரிக் பொருட்கள் வாங்கப்படும்’ என தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கடந்த நான்கு நாட்களாக தமது தொழில் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.

அதேவேளை வீதியோரங்களில் நடைபாதை வியாபாரங்களில் ஈடுபடுவோர்களும் , வாகனங்களில் வந்து அவற்றை வீதியோரங்களில் நிறுத்தி வைத்து , ‘கம்பளம் ‘ உள்ளிட்ட துணிவகைகள் உடுபுடவை வியாபரத்தில் ஈடுபடும் வியாபாரிகளும் தமது வியாபர நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

குறித்த வியாபர , தொழில் நடவடிக்கைகளில் பெரும்பாலும் முஸ்லீம் மக்களே ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#business #stop # jaffna  #muslims

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More