Home இலங்கை பாடசாலை ஆரம்பமாகி முடிவடையும் வரை அனைத்து கதவுகளும் மூடப்பட வேண்டும்

பாடசாலை ஆரம்பமாகி முடிவடையும் வரை அனைத்து கதவுகளும் மூடப்பட வேண்டும்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாடசாலை ஆரம்பமாகி முடிவடையும் வரை பாடசாலை வளாக அனைத்து கதவுகளும் மூடப்பட வேண்டும். வெளியாட்கள் யாரும் பாடசாலைக்குள் அனுமதிக்க கூடாது என வடமாகாண பிரதம செயலாளர் அ. பத்திநாதன் வடக்கின் சகல கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் 29ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட வுள்ளன. அந்நிலையில் , பாடசாலைகளினதும் , மாணவர்களினதும் பாதுகாப்புக்களை உறுதிப்படுத்தும் முகமான நடவடிக்கைகள் தொடர்பில் வடமாகாண பிரதம செயலாளரின் தலைமையில் அவரது அலுவலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கலந்துரையாடல் நடைபெற்றது.

அக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுனரின் செயலாளர் , கல்வி அமைச்சின் செயலாளர் , மற்றும் 12 வலய கல்வி பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதன்போது , பாடசாலை ஆரம்பமாகி முடிவடையும் வரையில் பாடசாலை வளாகத்தின் அனைத்து வாயில் கதவுகளும் பூட்டப்பட வேண்டும். வெளியாட்கள் யாரும் பாடசாலை வளாகத்தினுள் அனுமதிக்க கூடாது. மாணவர்கள் ஆசிரியர்களின் வரவு , விடுகை தொடர்பில் அதிபர் கவனம் செலுத்த வேண்டும். அதேநேரம் பாடசாலை வளாகத்தின் வெளி பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என முடிவெடுக்கபப்ட்டது.

#school # doors # jaffna

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More