அறிவும், சேவைத்திறன் உள்ள எவரும் அரசியலுக்கு வரலாம் சினிமாக்காரர்கள்தான் வரவேண்டும் என்பதில்லை என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிகழ்வொன்றில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். அதனால், அப்பகுதியில் விஜய்சேதுபதி ரசிகர்கள் திரண்டனர். திறப்பு விழாவைத் தொடர்ந்து தனியார் விடுதியில் செய்தியாளர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “சினிமா நடிகர்கள் சின்னத்திரைக்கு வருவது பின்னடைவு என்பது இல்லை. அதுவும் ஒரு அங்கீகாரம்தான். அதை முன்னேற்றமாகத்தான் பார்க்கிறேன். வெள்ளித்திரை, சின்னத்திரை என்று பாகுபாடு இல்லை. எங்கு இருந்தாலும் சிறப்பாகப் பணி செய்ய வேண்டும். வாக்களிப்பதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு செய்துள்ளேன்.
வாக்களிக்கும் கடமையைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். அரசியலுக்கு சினிமாக்காரர்கள்தான் வர வேண்டும் என்பதில்லை; அறிவும், சேவை பண்பும் உள்ள யாரும் அரசியலுக்கு வரலாம். நான் எந்தக் கிராமத்தையும் தத்தெடுக்கவில்லை. தேர்தலுக்குத் தற்போது பணம் கொடுக்கவில்லை, பல வருடங்களுக்கு முன்பிருந்தே பணம் கொடுக்கிறார்கள். சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரவுவதை தடுக்க எது உண்மை என்று ஆராய வேண்டும். எல்லாவற்றையும் நம்பக்கூடாது. டிக்டாக் போன்றவற்றில் நல்ல விஷயங்களும் கெட்ட