171
வத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெல்லம்பிட்டி, நவகம்புர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த லொறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த லொறியில் வெடி பொருட்கள் காணப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் ஷங்கிரி-லா ஹோட்டல் மீது தற்கொலை குண்டு தாக்கிய நபரின் பெயரிலேயே குறித்த லொறி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WPDAE4197 #eastersundayLK #lorry
Spread the love