171
இலங்கையில் பயங்கரவாதிகள் பல இடங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு 2 ஆவது முறையாக எச்சரித்துள்ளது. இவ்வாறு அமெரிக்கா ஒரேநாளில் தமது பிரஜைகளுக்கு இரு தடவைகள் பயங்கரவாத எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
குறித்த எச்சரிக்கையில் பயங்கரவாதக்குழுக்கள் தொடர் தாக்குதல்களை இலங்கையில் நடத்தக்கூடும். எவ்வித அறிவித்தலுமின்றி சுற்றுலா தலங்கள், போக்குவரத்து தரிப்பிடங்கள், சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், ஹோட்டல்கள், விடுதிகள், உணவகங்கள், வழிபாட்டு நிலையங்கள், பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், கலை நிகழ்வுகள் இடம்பெறக்கூடிய இடங்கள், கல்வி நிலையங்கள், விமானநிலையம், வைத்தியசாலைகள், மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் இவ்வாறு பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.#usembassy #colombo #srilanka ##eastersundayattacklk
Spread the love