117
கிளிநொச்சியில் நேற்று (25.04.16) மாலை ஆறு மணியளவில் சந்தேகத்தின் பெயரில் ஆறுபேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 5 ம் மாதம் மூன்றாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. இவர்கள் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி காவற்துறையினரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.#kilinochchi #eastersundayattacklk #policearrest
Spread the love