ஐ.எஸ். கொடியுடன் சம்மாந்துறையில் 7 பேர் கைது – சாய்ந்த மருதில் பாதுகாப்புத் தரப்பிற்கும் குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை..
கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் தற்கொலை அங்கிகள் தரயாரிக்கப்படுவதாக கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையாக இராணுவம் மற்றும் காவற்துறை விசேட அதிரடிப் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு குழுவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே சந்தேக குழுவினருடன் பரஸ்பர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக காவற்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை சம்மாந்துறை சென்னல் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது தற்கொலை அங்கி, வெடிபொருட்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடிகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறை ஊடகம் தெரிவித்துள்ளது. அத்துடன் நிந்தவூர் பகுதியில் குண்டுகளுடன் 2 பைகளும் வீதியில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சுற்றிவளைப்புத் தேடுதலையடுத்து ஆயுதக் குழு ஒன்று தப்பியோடியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளைசாய்ந்தமருது அஸ்ரப் வைத்தியாசலையின் பின்புறமாகவுள்ள சுனாமி வீட்டுத்திட்டப் பகுதியில் வெடிவிபத்து ஓன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்மாந்துறை சுற்றிவளைப்பின் போது அங்கிருந்து தப்பியோடிய நபரே குறித்த பகுதியில் குண்டை வெடிக்க வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் பெரும் சத்தத்துடன் குறித்த வெடி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிவிக்கப்படுகிறது.