177
கொழும்பு, வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஒரு கிலோகிராம் நிறையுடைய சி-4 வெடிபொருட்களை மீட்டுள்ள இலங்கை கடற்படையினர் அது தொடர்பில் 3 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்றில் குறித்த வெடிபொருட்களை எடுத்துச் செல்லும்போது மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே வெடிபொருட்களை மீட்டுள்ள கடற்படையினர் முச்சக்கர வண்டியையும் வெடிபொருட்களையும் சந்தேக நபர்களையும் தடுப்புக் காவலின் கீழ் கொண்டு வந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
#arrest #wellawathe #eastersundayLK #colombo
Spread the love