186
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் படையினர் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இந்த தேடுதல் நடவடிக்கை இன்று (27.04.19) காலை முன்னெடுக்கப்பட்டது. இந்தப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள், பராமரிப்பற்ற காணிகள் என்பன படையினரால் சோதனையிடப்பட்டன. இதேவேளை அப்பகுதியில் போக்குவரத்தில் ஈடுபட்டவர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர். இவ்வாறான சோதனைகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.#KilinochchiIyakachi#policeroundup #eastersundayattacklk
Spread the love