புதிய 20 ரூபாய்த்தாள்களை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பழைய 500, 1000 ரூபாய்த்தாள்களை பண மதிப்பு இழப்பு செய்யப்பட்ட பிறகு புதிய 500, 2000, 100, 50, 10 ரூபாய்த்தாள்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது. அந்த வகையில் தற்போது புதிய 20 ரூபாய்த்தாள்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கான மாதிரி ரூபாய்த்தாள்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது
புதிய 20 ரூபாய் நோட்டு பச்சை, மஞ்சள் நிறம் கலந்து காணப்படும். அதில் மகாத்மா காந்தி படமும், ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ் கையெழுத்தும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தூளின் மறுபக்கம் நாட்டின் கலாசார பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் எல்லோரா குகைக்கோவில் தோற்றம் இடம் பெறுகிறது. புதிய 20 ரூபாய்த்தாள்களை வெளியிடப்பட்டாலும், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பழைய 20 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளது.
#rupees #india #reservebank