(க.கிஷாந்தன்)அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற தொடர் வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நாவலபிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொஹமட் சாதிக் அப்துல் ஹக் மற்றும் மொஹமட் சாஹித் அப்துல் ஹக் என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குண்டுவெடிப்பினை மேற்கொண்டு தலைமறைவாகியிருந்த இரண்டு பிரதான சந்தேக நபர்கள் உட்பட சந்தேக நபர்கள் பயணித்த வான் வண்டியும் வான் வண்டியினை செலுத்திய சாரதியோடு மூன்று பேரும் தம்மால் கைது செய்யபட்டுள்ளதாக நாவலபிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த கைது சம்பவம் இன்று (28.04.2019 )விடியற்காலையில் இடம்பெற்றதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து நாவலபிட்டி நகரில் உள்ள பள்ளிவாசல் அராபி முஸ்லிம் பாடசாலை போன்ற சந்தேகமான இடங்களை நேற்று (27.04.2019.)சனிகிழமை நாவலபிட்டி காவல்துறையினர் இராணுவத்தினர் விசேட அதிரடி படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகமான முறையில் வான் வண்டி ஒன்று மீட்கபட்டுள்ளதோடு, வான் வண்டியின் சாரதியையும் நாவலபிட்டி காவல்துறையினத் கைது செய்தனர். கைது செய்யபட்ட வான் சாரதியிடம் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் குறித்த வான் யாருடையது இந்த வானில் பயணித்தவர்கள் யார் என விசாரனைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போதே கொழும்பில் மேற்கொள்ளபட்ட குண்டுவெடிப்பின் பிரதான குண்டுதாரிகள் இருவர் கம்பளை பகுதியில் உள்ள பாதணி விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் தலைமறைவாகிள்ளதாகவும் குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் தான் தான் குறித்த வான் வண்டியில் ஏற்றிவந்ததாகவும் அவர்கள் இரண்டு பேரும் சகோதரர்கள் எனவும் குறித்த வான்சாரதி வாக்குமுலம் வழங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சாரதியினால் வழங்கபட்ட வாக்குமுலத்தின் முலமாக கம்பளை பகுதியில் உள்ள பாதணி விற்பனை நிலையத்தினை நாவலபிட்டி காவல்துறையினர் சுற்றிவளைத்த போதும் குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டு இருந்தது. இதனையடுத்து குறித்த வர்த்தக நிலையத்தின் பூட்டினை உடைத்து பாதணி விற்பனை நிலையத்திற்குள் புகுந்த காவல்துறையினப் இரண்டு பிரதான சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக நாவலபிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #nawalapitiyaarrest #srilanka #kalmunai #sainthamaruthu #Eastersundayattackslk
சந்தேகநபர்கள் இருவர் அதிகாலை நாவலப்பிட்டி பகுதியில் கைது
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் இன்று (28.04.19) அதிகாலை நாவலப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். மொஹமட் இவுஹயூம் சாதிக் அப்துல்ஹக் மற்றும் மொஹமட் இவுஹயூம் ஷாஹித் அப்துல்ஹக் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல்களின் பின்னர், இந்த சந்தேகநபர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை காவற்துறையினர் வெளியிட்டிருந்ததாக, காவற்துறை ஊடகப் பேச்சாளர், காவற்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.