148
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்புக்கு பொறுப்பான தலைவரான மொஹமட் பவாஸ் என்பவர் இன்று விசேட காவல்துறைக் குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
38 வயதுடைய மொஹமட் பவாஸ் வாழைத்தோட்ட தொடர்மாடி குடியிருப்பிலுள்ள வீடொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
சந்தேகநபரை கைதுசெய்யும் போது, அவரிடம் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் சுவரொட்டிகள், அமைப்பின் போதனைகள் அடங்கிய பென்ட்ரைவ், போதனைகளுடனான காணொளிகள் அடங்கிய கைத்தொலைபேசிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது#arrest #colombo #flats #eastersundaylk
Spread the love