178
கல்முனை, சவளக்கடை மற்றும் சம்மாந்துறை பகுதிகளில் இன்று காலை 8 மணி உடன் காவல்துறை ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல்களினையடுத்து நாடுபூராhகவும் இரவில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம் நேற்றையதினம் அமுல்ப்படுத்தாத போதிலும் கல்முனை, சவளக்கடை மற்றும் சம்மாந்துறை பகுதிகளில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குறித்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 8 மணி உடன் நீக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.#curfew #samamthurai #kalmunai
Spread the love