அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் தாம் வீதிக்கு இறங்க நேரிடும் என்று கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கடந்த கால விசாரணைக் குழுக்களைப் போல இதுவும் செயலிழந்தால், அதுவே தமக்கு வழி என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதலை கண்டறிய ஜனாதிபதி விசாரணை குழுவொன்றை நியமித்ததாக கூறியுள்ள போதிலும் அதுகுறித்த எந்த தெளிவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விசாரணைக் குழுவும் இதற்கு முன்னர் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட விசாரணை குழுக்களை போல செயலிழந்து போய்விடுமோ என்ற சந்தேகம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உண்மைகளை கண்டறிவதில் அரசாங்கம் பொறுப்பை உணர்ந்து செயற்படாவிட்டல் நாம் வீதிக்கிறங்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள ஆண்டகை, முடியுமென்றால் இந்த விடயத்தில் மாத்திரம் தீர்வுகளை காண சகல கட்சிகளையும் இணைந்து அரசாங்கம் ஒன்றினை உருவாக்குங்கள் என்ற கோரிக்கையினையும் அவர் ன்வைத்தார்.
கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இந்த காரணிகளை சுட்டிக்காட்டினார். இந்த சந்திப்பில் வன. இத்தே பானே தம்மாலங்கார தேரரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. #eastersundaylk #srilanka