குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவில் – நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாம் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணசூழ்நிலையினால் அச்சமடைந்துள்ளதாக கேப்பாபுலவு மக்கள் தெரிவிக்கின்றனர். அச்சத்திற்கு மத்தியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தங்களின் காணிகளை விரைவில் விடுவிக்க ஆவண செய்யுமாறு கேப்பாபுலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு கிராமத்தில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்விக காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்தப் போராட்டம் இன்று 782 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தம்மை அச்சத்திற்குள் தள்ளியுள்ளதாக கேப்பாபுலவு மக்கள் குறிப்பிடுகின்றனர்.
தொடர்ச்சியாக போராட்டக்களத்தில் இருந்து தாம் மன உளச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.இருப்பினும் எத்தடை வரினும் இறுதிவரை போராடுவோம் என தெரிவித்துள்ளனர்
#kepapilavu #mullaitheevu