184
அக்கரைப்பற்று காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை கடற்பகுதியில் கரையொதுங்கிய ஒரு தொகுதி வெடிபொருட்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். இலங்கை கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து இன்று புதன்கிழமை (01) காலை கடலில் ஒதுங்கி வந்த பொதியை கண்டெடுத்து அதிலிருந்த 06 பிலாஸ்டிக் குழாயில் அடைக்கப்பட்ட வெடிபொருட்களையும், மற்றும் வெடிக்கவைக்கும் கருவிகளையும் கண்டுபிடித்துள்ளனர்.
06 உள்ளுரில் தயாரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள், 03 ஒயில் போத்தல்கள், 01 சைனட் குப்பி உட்பட மற்றும் வெடிக்கக் கூடிய உபகரணங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட உள்ளுரில் தயாரிக்கப்பட்ட 02 கைக்குண்டுகளை அவ்விடத்திலேயே குண்டு செயலிழக்கும் பிரிவினர் செயலிழக்கச் செய்துள்ளனர்.
இதையடுத்து குறித்த இடத்திற்கு விசேட அதிரடிப்படையினரும், குண்டு செயலிழக்கும் பிரிவினரும் விரைந்து பரிசோதனைகளை மேற்கொண்டதோடு கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களையும் செயலிழக்கச் செய்தனர்.
பாறுக் ஷிஹான்
Spread the love