276
இராணுவ தேடுதலில் தீவிரவாதிகளினால் மறைத்து வைத்ததாக நம்பப்படும் பெரும் தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இன்று(1) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி 6 ஆம் வீதி விளினையடி பகுதியில் மேற்குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது சட்டத்தரணி ஒருவரின் பாவனையற்ற நிலையில் இருந்த காணியில் புதைக்கப்பட்ட நிலையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன் போது எம்.பி 25 ரக அமெரிக்க தயாரிப்பு மைக்ரோ கைத்துப்பாக்கி, 9 எம் எம் கைத்துப்பாக்கி, பென் துப்பாக்கிகள் 2 ,சொட்கண் துப்பாக்கி தோட்டாக்கள் 8, ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு 1, மற்றும் 170 தோட்டாக்கள் ,ஜெலக்னைட் குச்சிகள் 200 ,வயர் தொகுதி 23 ,அமோனியம் நைட்ரேட் உர பை 25 கிலோ 4 ,இராணுவ மேலங்கி 1, வாள் 1 ,கைத்துப்பாக்கி தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டு தடயவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்பொருட்களில் வாள் மற்றுமொரு வீட்டில் இருந்தும் ஜெலக்னைட் குச்சி கல்குவாரி ஒன்றில் இருந்தும் மீட்கப்பட்ட அதே வேளை ஏனைய பொருட்கள் கிறீஸ் பூசப்பட்டு நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஒரு பதற்றமான சூழ்நிலை சம்மாந்துறை பகுதியில் காணப்படுவதுடன் காவல்துறை மோப்பநாய் வரவழைக்கப்பட்டு குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாறுக் ஷிஹான்
#sammanthurai #roundup #explosive #army #srilanka
.
Spread the love