லண்டனில் அமைந்துள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகி ஒரு வருடத்துக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் நேற்றையதினம் லோட்ஸில் இடம்பெற்ற போது தற்போதைய தலைவர் அந்தோனி ரைபோர்ட், கழகத்தின் அடுத்த தலைவராக குமார் சங்கக்காரவை அறிவித்துள்ளார். பிரித்தானிய குடியுரிமை இல்லாத ஒருவரை அந்தக் கழகத்தின் தலைவராக நியமிப்பது இதுவே முதன்முறையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
உலக கிரிக்கெட்டின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் மேரிலெபோன் கிரிக்கெட் கழகமானது கிரிக்கெட் விதிமுறைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
#KumarSangakkara #MaryleboneCricket #first #nonBritish #president