ஒடிசாவில் பானி புயல் நாளை கரையைக் கடக்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 43 புகையிரதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பானி புயல், ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் நாளை கரையைக் கடக்கும் எனவும் இதன்போது மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பானி புயல் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், குறித்த பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் என ஒடிசா அரசு அறிவுறுத்தியுள்ளதுடன் அனைத்து பாடசாலைகள் மற்றும் , கல்லூரிகளுக்கும் இன்று முதல் விடுமுறை அறிவித்துள்ளது. அத்துடன் பயணிகளின் பாதுகாப்பு கருதி, 43-க்கும் மேற்பட்ட புகையிரதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் மேற்கு வங்காளத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது