183
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொழும்பு , நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ்.ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் யாழ்.ஆயர் ஜஸ்ரின் ஞானபிரகாச ஆண்டகை பிரதான சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து மறை மாவட்ட குருமுதல்வர்கள் , பங்குதந்தைகள் ஆகியோர் மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் , உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.
#eastersundaylk #colombo #negambo #batticaloa #suicideattack
Spread the love