Home இந்தியா ஒடிசாவில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைப்பு

ஒடிசாவில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைப்பு

by admin


ஒடிசாவில் பானி புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பானி புயல், ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் இன்று கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் பயணிகளின் பாதுகாப்பு கருதி 200-க்கும் மேற்பட்ட புகையிரதங்களையும் தென்கிழக்கு புகையிரதசேவை ரத்து செய்துள்ளதுள்ளதுடன் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

#odisha  #fanicyclone  #camps

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More