தற்கொலை குண்டுதாக்குதல் மேற்கொள்ளப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அவர் இன்று காலை பிரதமர் அங்கு சென்றுள்ள நிலையில் மட்டக்களப்பில் காவற்துறையினர், இாரணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் அதிகளவில் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை சீயோன் தேவாலயத்தில் செய்திகளைச் சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லையெனவும் ஊடகவியலாளர்களை சுமார் 100 மீற்றர் அளவு தொலைவில் நிற்குமாறு படையினர் அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் சீயோன் தேவலயமும் உள்ளடங்கும் நிலையில் அங்கு 30க்கும் மேற்பட்டோர்; உயிரிழந்திருந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #suicideattacklk #eastersundayattacklk #zionchurchbatticaloa
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க…
208
Spread the love
previous post