ஷங்ரி-லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹரான் உயிரிழக்கவில்லை என Daily News பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சஹரான் உயிரிழந்தமை தொடர்பாக சந்தேகம் வெளியிட்டுள்ளதாக இப்பத்திரிகை புலனாய்வுத் துறையினரை மேற்கோளிட்டு இன்று (சனிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது .
அதில் தற்கொலைதாரிகளுடன் சஹரான் வந்திருந்தாலும் அவர் தற்கொலை தாக்குதல் நடத்தாமல் தூர இருந்து Remote control மூலம் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்திருக்கலாமென பாதுகாப்பு தரப்பு சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலைதாரியின் உடல் என்று சொல்லப்படுவதுடன் சஹ்ரானின் உடலமைப்பு ஒத்துப்போகாமை குறித்தும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் என அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்களை வேறு ஒரு வடிவத்தில் எங்காவது நடத்த சஹரான் உயிருடன் இருக்கக் கூடுமெனவும் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்படவேண்டுமெனவும் புலனாய்வுத்துறையினர் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது..
ஏற்கனவே சஹரான் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்ததாக அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த சந்தேகம் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #suicidebomber #eastersundayattacks #srilanka #ShangriLahotel #ZahranHashim #jihadistgroup #Remotecontrol