184
மஸ்கெலியா, சாமிமலை தோட்டம் கொமரி பிரிவில் இன்றையதினம் விறகு சேகரிக்க சென்ற மூன்று மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள், மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மஸ்கெலியா காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாரிய கற்பாறையின் அடிப்பகுதியில் இருந் குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட மூன்று மாணவர்களும் மஸ்கெலியா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
(க.கிஷாந்தன்)
#bee #students #maskeliya
Spread the love