காத்தான்குடி பகுதியில் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் ன்போது தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் வீடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு நுவரெலியாவில் மேற்கொண்ட பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாய்ந்தமருது முற்றுகையின் போது குண்டை வெடிக்கச் செய்து 15 பேர் உயிரிழந்த சம்பவத்தினை ட்ரோனர் புகைப்படக் கருவியைப் பயன்படுத்தி இந்த வீட்டிலிருந்து படம் எடுத்துள்ளனர் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் அனுராதபுரம், நாச்சாதுவ பிரதேசத்தில் களஞ்சியத்திலிருந்து மிகவும் அந்தரங்கமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு லொறிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இரத்மலானையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது நவீன தொழில்நுட்ப உபகரணங்களுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை மத்துகம – வெலிப்பன்ன பிரதேசத்தில் இருந்து பாழடைந்த வீடொன்றிலிருந்து உள்ளுர் தயாரிப்பான 3 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த காவல்துறையினர் முப்படையினரின் சீருடையினைப் பொன்ற பெருந்தொகையான துணி ஹெம்மாத்தகம பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
#kattankudy #army #roundup #nationalthowheedjamath #arrest #explosive