அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரின் ஒத்துழைப்பின்றி பயங்கரவாதம் தோன்றியிருக்க வாய்ப்பில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் இவர்கள் இவ்வாறு செயற்படுவதற்கான அதிகாரத்தை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே வழங்கியதாக வழங்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பார்வையிட்டதைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை அரசியல் பலமில்லாமல் தோற்கடிக்க முடியாது எனத் தெரிவித்த அவர், ரிஷாட் பதியுதீனுக்கு, ஹிஸ்புல்லாவிற்கும் இதற்கான அதிகாரத்தை 2008- 2009 களில் பசில் ராஜபக்ஷதான் கொடுத்தார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது அடுத்த ஜனாதிபதி தேர்தல் குறித்து மட்டும்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறார் எனவும் இதற்காக முஸ்லிம் மக்களின் 10 இலட்சம் வாக்குகளை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக பயங்கரவாத செயற்பாடுகளை அவர் கண்டும் காணாமல் இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்
ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லா, அஸாத் ஸாலி, முஜிபூர் ரஹ்மான் போன்றோரின் ஒத்துழைப்புக்கள் இன்றி இவ்வாறான பயங்கரவாதத் தாக்குதலொன்று இலங்கையில் இடம்பெற வாய்ப்பே இல்லை எனவும் இந்த நால்வரும்தான் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிவதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.
இவர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் நிழலிலேயே காணப்படுவதாகவும் இவர்களின் பிரதான நோக்கம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதே எனவும் விஜயதாஸ ராஸபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
#rishadbathiudeen #mhmhizbullah #WijeyadasaRajapaksh #ranilwickramasinghe