187
சமூக இணைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவேவ அறிவித்துள்ளார்.
நீர்கொழும்பு பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகாரணமாக நேற்றிரவு சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அத்தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை நீர்கொழும்பு பிரதேசத்தின் சில பகுதிகளில் நேற்றிரவு அமுல்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று காலை 7 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
#nigambo #socialmedia
Spread the love