Home உலகம் ரஷ்யாவில் ஏற்பட்ட விமான தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவில் ஏற்பட்ட விமான தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

by admin


ரஷ்யாவின் மொஸ்கோவில் இடம்பெற்ற விமான தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றையதினம் மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து மேர்மான்ஸ்க் நோக்கி பயணித்த எரோபுளொட் ஜேட் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதனால் விமானம் உடனடியாக திரும்ப தரையிறக்கப்பட்டுள்ள வேளை திடீரென புகை மூட்டத்துடன் தீ வேகமாக பரவியுள்ளது.

இதையடுத்து அவசரமாக விமான ஓடுதளத்தில் நிறுத்தப்பட்ட விமானத்தின் அவசரகால வழியினூடான பயணிகள் வெளியேற்றப்பட்டனர். எனினும் குறித்த விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 78 பேர் பயணம் செய்த நிலையில் அவர்களில் 41 பேர் உயிரிழந்ததுடன், 37 பேர் தப்பியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் உள்ளடங்குவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#Burning #Russianplane #crash #Moscoairport

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More