பயங்கரவாத சூழலை அமைத்துக்கொடுத்தது முஸ்லிம் அரசியல்வாதிகளே என்றும் தற்போது கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் இறுதியில் இந்த பூதம் முஸ்லீம்களையும் அழித்துவிட்டே முடிவுக்கு வரும் என்பதை மறந்துவிட வேண்டாம் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக பாராளுமன்றில் தெரிவித்தார்.
அத்துடன் ரணில் விக்கிரமசிங்க தனது பிரதமர் நாற்காலியை தக்கவைக்கவும், அடுத்ததாக தான் ஜனாதிபதி ஆசனத்தில் அமர வேண்டும் என்ற கவிழும் உள்ளதுடன், ஜனாதிபதி மீண்டும் தான் ஜனாதிபதி ஆசனக்தில் அமர வேண்டும் என்ற ஆசையிலும் தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொள்ளாது அரசியல் காரணிகளை தேடவே புலனாய்வு துறை பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த அரசியல் மோதலில் விளைவாகே கடந்த 21 ஆம் திகதி நாட்டில் பயங்கரவாதம் வெடித்ததாகவும் இது குறித்து பிரதமரும் ஜனாதிபதியும் இந்த சபையில் பொறுப்புக்கூறியாக வேண்டும் என்றும் இந்த காரணிகளை கைவிட்டு செல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல் முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்கள் குறித்து கவனிக்காது வியாபாரம் மட்டுமே செய்ததாகவும் முஸ்லிம் வாக்குகளை கொண்டு அரசியல் வியாபாரம் செய்ததாகவும் குற்றம் சுமத்திய அவர், ஒவ்வொரு முஸ்லிம் அமைச்சரும் மக்களுக்காக அரசியல் செய்யவில்லை என்றும் இவர்களுக்கு சலுகைகள்தான் முக்கியமாக உள்ளது என்றும் கூறினார்.
இந்த பூதத்தை சாடியில் இருந்து வெளியில் எடுத்தது முஸ்லிம் அமைச்சர்களே, அமைச்சர்கள் நேரடியாக குண்டுத்தாக்குதலை செய்யாது போனாலும் கூட அதற்கான சூழலை அமைத்துக்கொடுத்தது முஸ்லிம் அரசியல்வாதிகளே என்றும் அநுரகுமார மேலும் கூறினார். #anurakumara #jvp #politicians