178
தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்யிடுவது மகிந்த ராஜபக்சவின் விருப்பம் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் மகிந்த ராஜபக்சவால் போட்டியிட முடியாத நிலையிலேயே அவர் இந்த விருப்பத்தை கொண்டிருப்பதாகவும் கோத்தாபய ராஜபக்ச கூறுகின்றார்.
இந்தியாவிலிருந்து வெளிவரும் த வீக் என்ற இதழுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குள்ள தலைவர் மகிந்த ராஜபக்ச எனினும் அரசமைப்பின் 19 வது திருத்தம் காரணமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது இதன் காரணமாக அவர் நான் போட்டியிட வேண்டும் என எதிர்பார்க்கின்றார் எனவும் கோத்தாபய ராஜபக்ச விளக்கியுள்ளார்.இதேவேளை தம்மால் பல விடயங்களை செய்ய முடியும் என மக்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள அவர் தான் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டுவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தாம் இலங்கையின் பாதுகாப்பு செயலாளராகயிருந்திருந்தால் தீவிரவாதமயப்படுத்தலை கண்காணித்து தம்மிடமுள்ள பொறிமுறைகளை பயன்படுத்தி அதனை கட்டுப்படுத்திருயிருக்க முடியும் என்றும் கோத்தாபய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
Spread the love