ஐ.பி.எல். தொடரில் சென்னை சுப்பர்கிங்ஸ் அணியை வென்று மும்பை இந்தியன்ஸ் அணி; இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்றிரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இதனையடுத்து 132 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 18.3 ஆவது ஓவரில் வெற்றியினை பதிவு செய்து இறுதிச் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது . இந்த தொடரில் மும்பை அணி சென்னை அணியை எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது
இதேவேளை இன்று இரவு டெல்லி கப்பிட்டல்ஸ் மறிறும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் போட்டியிடவுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது என்பதனால் 10ம் திகதி நடைபெறும் 2-வது தகுதி சுற்று போட்டியில் முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சென்னை அணியுடன் போட்டியிட்டு வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது
#MumbaiIndians #Chennaisuperkings #ipl #final