139
வவுனியா, சாலம்பகுளம் பகுதியில் மூடியிருந்த வீடொன்றில் இருந்து 15 அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்றையதினம் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே மேற்படி அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வௌ;வேறு நபர்களின் பெயர்களுடைய அடையாள அட்டைகள் பொலிதீன் பை ஒன்றினுள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளரை தேடி வருவதாகவும் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
#vavuniya #identitycards #police
Spread the love