காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து அன்றைய தினம் இருவரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்புமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு உள்ளிட்ட மூன்று தேவாலயங்கள் மற்றும் விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத்தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு இன்றையதினம் விசாரணைக்கு வந்தபோதே உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதிவாதிகளின் கவனயீனத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் குறித்து குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
#defenseSecretary #HemasiriFernando #pujithjayasundara #highcourt #eastersundaylk