நோன்பு நோற்பதற்காக ஷகர் உணவிற்கு சென்ற பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய கோழி உணவு வழங்கப்பட்டுள்ளது. இன்று (9) யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட ஐந்துசந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பாதிக்கப்பட்டவரால் உரிமையாளரிடம் தெரிவிக்கப்பட்ட போதிலும் அதற்கு பணம் அறவிட்டு பல்கலை மாணவனை நாளை வருமாறு உரிமையாளர் திருப்பி அனுப்பியுள்ளார்.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளில் உள்ள உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள்,தரமற்ற உணவு விற்பனை விலைக்கட்டுப்பாடு இன்றி விற்பனை அதிகமாக நடைபெற்று வருவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் புதிய,பழைய உணவகங்கள் ஆரம்பத்தில் நன்றாக சுகாதார விடயங்களில் அக்கறை காட்டிக்கொண்டு பின்னர் அவற்றை மீறி நடப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. Jaffnauniversitystudent #chickenfood
1 comment
யாராக இருந்தாலும் பழைய உணவிணை வைத்திருப்பது விற்பது மற்றும் மீள்சுழற்சி மூலம் விற்பனை செய்வது தடுக்கப்பட்ட குற்றச் செயல்களோடு சமூக விரோதச் செயலுமாகும். இதற்குரிய தண்டனைகளை சமூகரீதியாக வழங்கினால் மாத்திரமே இத்தகைய குற்றங்களை முற்றாகத் தடுக்க முடியும். தடுப்போமா!