கொரிய போரில் இறந்த அமெரிக்கர்களின் எச்சங்கள் வடகொரியாவில் இருந்து எடுத்துச்செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது
1950 – 1953 கொரிய போரில் கொல்லப்பட்ட 50 அமெரிக்க படை வீரர்களின் எச்சங்களை வடகொரியா கடந்த ஆண்டு அமெரிக்காவிடம் ஒப்படைத்திருந்தது. இது அமெரிக்க மற்றும் வடகொரியா தலைவரகளுக்கிடையிலான உறவு மேம்பட்டு வருவதை காட்டும் அறிகுறியாக கருதப்பட்டு வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் இரு நாட்டு தலைவர்களிடையே நடந்த உச்சிமாநாடு தோல்வியடைந்ததை அடுத்து வடகொரியாவிடம் இருந்து அமெரிக்க படை வீரர்களின் எச்சங்களை பெறும் முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது
இறந்த அமெரிக்கர்களின் எச்சங்களை பெறுவது தொடர்பாக 2019-ம் ஆண்டுக்கான கூட்டு மீட்பு நடவடிக்கைகளில் தாங்கள் கொரிய மக்கள் ராணுவத்தினை தொடர்பு கொண்ட முயற்சிகளின் வாயிலாக இந்த மீட்பு முயற்சிகள் தற்காலிகமாக கைவிடப்படுகிறது என பென்டகன் தெரிவித்துள்ளது.
இரு தரப்பும் சேர்த்து நன்றாக திட்டமிட்டு, ஒருங்கிணைந்து, கள செயல்பாடுகளை மேற்கொள்வது இனி சாத்தியமில்லை என்ற புள்ளியை தாங்கள் அடைந்துவிட்டோம் எனவும் பென்டகன் தெரிவித்துள்ளது. கொரிய போரின்போது சுமார் 36 ஆயிரம் அமெரிக்க படை வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் 7700 பேருக்கும் அதிகமானோர் கணக்கில் உள்ளடக்கப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ள அதேவேளை 5300 பேர் வடகொரிய வீரர்கள் காணாமல் போயுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
#UnitedNations #Koreanwar #Seoul #Southkorea #Pentagon #Suspend