கரந்தெணிய பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கரந்தெணிய பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபருக்கு எதிராக ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், தங்காபரணங்களை கொள்ளையிட்ட குற்றச்சாட்டுகளும் சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் இன்று பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #arrested #handGrenade
கரந்தெணியவில் கைக்குண்டு ஒன்றுடன் ஒருவர் கைது..
173
Spread the love