453
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில். வாழைப்பழத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் , வாழைக்குலை திருட்டுகள் அதிகரித்துள்ளதாக வாழைக்குலை செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோப்பாய் , நீர்வேலி பகுதிகளில் உள்ள வாழை தோட்டங்களுக்குள் இரவில் ஊடுருவும் திருடர்கள் அங்குள்ள வாழைக்குலைகளை வெட்டி செல்கின்றனர்.
நாட்டில் தற்போது காணப்படும் அசாதாரண சூழல் காரணமாக மாலை வேளைகளுடன் ஊர் அடங்குவதனால் இரவு வேளைகளில் வாழைக்குலை திருடர்கள் தமது கைவரிசையை காட்டி வருகின்றனர்.
யாழில் தற்போது காற்று காலம் ஆரம்பித்துள்ளதால் வாழைப்பழத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதனால் சந்தைப்படுத்த முடியாத நிலையில் நாம் கவலையில் உள்ள நேரம் , எமது தோட்டங்களில் புகுந்து வாழைக்குலைகளை திருடர்கள் வெட்டி செல்வதனால் நாம் மிகவும் பாதிப்படைந்துள்ளோம் என செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
#banana #steal #kopay #neerveli
Spread the love