அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் சீன பொருட்கள் மீதான வரியை உயர்த்தினால், அதற்குரிய பதில் நடவடிக்கையை எடுக்க தயங்கமாட்டோம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளதனால் இரு நாடுகளிடையே மீண்டும் வர்த்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீன பொருட்களுக்கான இறுக்குமதி வரியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உயர்த்தியிருந்தார்.
அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்ததனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப்போர் மூண்டது.
இந்தநிலையில் அர்ஜென்டினாவில் நடந்த ஜி 20 மாநாட்டில் இரு நாட்டுத்தலைவர்கள் சந்தித்து பேசியநிலையில் இரு நாடுகள் இடையிலான வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டதுடன் வர்த்தகப்போருக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இருநாடுகளுக்குமிடையே பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
எனினும் இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததனால் அதிருப்தி அடைந்த டிரம்ப் 200 பில்லியன் டொலர் மதிப்புடைய சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வரும் 10 சதவீத வரி இன்று வெள்ளிக்கிழமை முதல் 25 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.
டிரம்ப் நிர்வாகம் சீன பொருட்கள் மீதான வரியை உயர்த்தினால், அதற்குரிய பதில் நடவடிக்கையை எடுக்க தயங்கமாட்டோம் என சீனா எச்சரித்துள்ளதனால் இரு நாடுகளிடையே மீண்டும் வர்த்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை சீனா துணை பிரதமர் லியு ஹி உள்பட உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இறுதிகட்ட வர்த்தக பேச்சுவார்த்தை அமெரிக்காவின் வோஷிங்டன் நகரில் நேற்று ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
#usa #china