142
ஏப்ரல் 21 அன்று இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர், ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலமையை கையாள்வதற்கு எந்த நாட்டினதும் இராணுவ உதவிகளும் இலங்கைக்கு தேவையில்லை என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, எந்த நாட்டினதும் படைகள் இலங்கைக்கு வருவதை இலங்கை ஒருபோதும் உற்சாகப்படுத்துவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு தேவைப்படுவது விசாரணைகளுக்கான உதவியும், எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆற்றல்களை மேம்படுத்துவதற்கு தொழிநுட்ப உதவிகளும் மாத்திரமே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவசியமாக தேவைப்படுகின்ற நேரத்தில் உதவ முன்வருகின்ற உண்மையான நண்பர்களை வரவேற்பதாக தெரிவித்த அவர், இந்திய இராணுவத்துடனான உறவுகளும் அயல் நாடுகளுடனான குறிப்பாக இந்தியாவுடனான இராணுவ இராஜதந்திரமும் சிறப்பான நிலையிலேயே இருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
#maheshsenanayake #மகேஷ்சேனாநாயக்க #ArmyCommander
Spread the love