சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறிய விவகாரம் தொடர்பில் கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த ஞாயிறு அன்று அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்றும் அவரது பெயர் நாதுராம் கோட்சே என்றும் கூறியிருந்தார்.
அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜகவினரும் இந்து அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் அவருக்கெதிராக இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு நாளை மதியம் 2.30 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் அரவக்குறிச்சியில் கமல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் என்பவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கமலின் பேச்சு இந்து மக்களிடம் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அரவக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியானது முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாக இருப்பதால் அவர்களின் வாக்குக்களை பெற்றுத் தருவதற்காக கமல் அவ்வாறு பேசியுள்ளார் எனவும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு அவர் பேசியது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பகைமை உணர்வை ஏற்படுத்தும் எனவே சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு;ளளது
குறித்த மனுவின் அடிப்படையில் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இந்தியத் தண்டனைச் சட்டம் 154, 153ஏ, 295ஏ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைத் தரப்பு தெரிவித்துள்ளது
#கமல்ஹாசன் #வழக்குகள் #தீவிரவாதி#இந்து #kamalhasan #hindu