151
புதிய சிங்களே தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் இதற்கான பிணையை வழங்கியுள்ளது.
வெல்லம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் அங்கு இடம்பெற்ற வன்முறை தொடர்பில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், டேன் பிரியசாத் சட்டத்தரணி ஊடாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் நேற்று சரணடைந்தார். இதன்போதே அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இதேவேளை குறித்த வழக்கு மீண்டும் ஜூலை 9 ஆம் திகதி நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#release #bail #புதியசிங்களேதேசியஅமைப்பின் #டேன்பிரியசாத்#பிணையில் #விடுதலை
Spread the love