161
அனுமதிப்பத்திரமற்ற அல்லது சட்டவிரோத வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை இம்மாதம் 20ம் திகதி காலை 6.00 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியின் பின்னர் இவற்றைக் கைப்பற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
அனுமதிப்பத்திரமற்ற அல்லது சட்டவிரோத வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை ஏற்கனவே செவ்வாய்க்கிழமை வரையிலான மூன்று நாட்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#சட்டவிரோத #வெடிபொருட்களை #காலஎல்லை #Illegal #xplosives #Period
Spread the love