இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியின் முன்களவீரரான ஈடின் ஹஸார்ட்டை 100 மில்லியன் யூரோக்களுக்கு, ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் கழகம் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இம்மாதம் 29ஆம் ஐரோப்பிய லீக் தொடரின் இறுதிப் போட்டி முடிவடைந்த பின்னர் அவரை றியல் மட்ரிட் கழகம் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற லெய்செஸ்டர் சிற்றிக்கெதிரான போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்த ஈடின் ஹஸார், தனது எதிர்காலம் குறித்து தான் தீர்மானித்து விட்டதாகவும், தனது விருப்பங்களின்படி செல்சி செயற்படக் காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, எதிர்வரும் பருவகாலத்தில் செல்சியுடன் இணைந்து கொள்ளவுள்ள ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டின் முன்களவீரரான கிறிஸ்டியன் புலிசிச்சின் நேர்காணலில் நடப்பு பருவகாலத்துடன் ஈடின் ஹஸார்ட் செல்சியை விட்டு விலகுவார் என தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்pபடத்தக்கது
#Edenhazard #realmadrid #Chelsea # ஈடின் ஹஸார்ட் #றியல் மட்ரிட்