அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக தலிபான் தீவிரவாதிகள் செலவழித்த பணத்தை திரும்ப வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் விரும்பியதாக அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தலிபன்களின் உணவு, தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளுக்கான பணத்தை அவர்களுக்கு திரும்ப வழங்குவதற்கு அமெரிக்க அரசின் குழுவொன்று மறுப்புத் தெரிவித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . தீவிரவாதிகளுக்கு ஆதரவான செயல்பாடாக இது அமைந்துவிட கூடாது என்பதற்காக இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதேவேளை இரு தரப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு தேவையான பணத்தை வழங்குவதற்கு அனுமதி கோரியதனை அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ராணுவத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து பாதுகாப்பான முறையில் வெளியேற்றுவதற்கு வழிவகுக்கும் நோக்கில் கட்டார் தலைநகர் டோகாவில் அமெரிக்கா இதுவரை தலிபன்களுடன் ஆறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
#Taliban #அமெரிக்கா #அமைதிபேச்சுவார்த்தை #Pentagon