இலங்கையில் ஏற்பட்ட சில வன்முறை சம்பவங்களின் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக தடைசெய்யப்பட்ட சமூக வலைத்தளங்கள்மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.
வடமேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் குளியாபிட்டி, நிக்கவரட்டி மற்றும் சிலாபம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினை அடுத்தே சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தன. தற்போது, முடக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள்மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலுமான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவற்துறை ஊடகப்பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். #socialmedia #Srilanka #northwestprovenceriots